விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்க சில நாட்களே உள்ள நிலையில் அவசரநிலையை பிரகடனம் செய்த ஜப்பான்!

Published

on

ஜப்பான் அரசு, டோக்கியோவில் கொரோனா வைரஸ் பரவலையொட்டி அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்க உள்ள நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளது அரசு தரப்பு.

இதன் மூலம் எந்தப் போட்டிகளுக்கும் ரசிகர்கள் இல்லாமலேயே நடத்த வாய்ப்பு உள்ளது எனத் தெரிகிறது. ஜூலை 23 ஆம் தேதி, டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஜப்பானிலும், குறிப்பாக டோக்கியோவிலும் டெல்டா வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

இதன் மூலம் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதை கணக்கில் கொண்டு தான் சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது அமலுக்கு வந்துள்ள அவசர நிலை, ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று ஜப்பான் நாட்டுப் பிரதமர் யோஷிண்டே சுகா தெரிவித்து உள்ளார்.

அதே நேரத்தில் கொரோனா தாக்கம் குறையும் பட்சத்தில் இந்த கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டு உள்ளது.

Trending

Exit mobile version