சினிமா செய்திகள்
‘சுல்தான்’ படத்திற்கு தொடங்கியது முன்பதிவு: ஏஜிஎஸ்-இல் முன்பதிவு செய்தால் சிறப்பு சலுகை
கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் சுல்தான். இந்த படம் ஏப்ரல் 2ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிட திட்டமிட்டுள்ள இந்த படத்திற்கு நேற்று இரவு முதல் முன்பதிவு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழகத்திலும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் நேற்று முதல் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து இந்த படத்தை பார்க்க அனைத்து தரப்பினர்களும் விருப்பத்தில் உள்ளனர்
மேலும் தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் திரையரங்குகள் மூடப்பட்டு விடும் என்பதால் இந்த படத்தை அவசரஅவசரமாக ரிலீஸ் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நேற்று முதல் இந்த படத்திற்கான ரிசர்வேஷன் தொடங்கிய நிலையில் ஏஜிஎஸ் திரையரங்குகளில் ரிசர்வேஷன் செய்தால் அங்கு வாங்கும் உணவுப் பொருள்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஏஜிஎஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியான நிலையில் அந்த திரையரங்கில் அதிக ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
Bookings have opened for #Sulthan in #AGSCinemas!! Book now with a FLAT 50% off on food!!! #JaiSulthan #SulthanFromApril2 @Karthi_Offl @iamRashmika @prabhu_sr @DreamWarriorpic pic.twitter.com/hgNNW9coBy
— AGS Cinemas (@agscinemas) March 30, 2021
கார்த்திக், ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்வில் உருவாகியுள்ள இந்த படத்தை எஸ்ஆர் பிரபு அவர்கள் தனது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.