தமிழ்நாடு

வேளாண் பட்ஜெட்: மதுரை மல்லி உற்பத்தியை அதிகரிக்க ரூ.7 கோடி: தேனி வாழைக்கு தனி அடையாளம்!

Published

on

தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனையொட்டி இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், விவசாயிகளுக்குப் பல பயனுள்ள திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

வேளாண் பட்ஜெட் (Agri Budget)

2023-2024 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை நிதியமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், விவசாயிகளுக்கு சாதகமான திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • மதுரை மல்லிகைப்பூ உற்பத்தியை அதிகரிப்பதற்கு, ரூ.1004327 கோடியில் புதிய இயக்கம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கடலூர் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பலா சாகுபடியை அதிகரிக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 5 வருடங்களில் 2,500 ஹெக்டேரில் பலா சாகுபடியை உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேனி, அரியலூர், மதுரை, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி மற்றும் திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் சுமார் 1,000 ஹெக்டேரில் சாகுபடியினை உயர்த்த ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கோவையில், கருவேப்பில்லையில் மகசூலை அதிகரிப்பதற்கு ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பருத்தி உற்பத்தியை அதிகரிக்க ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 60,000 சிறு, குறு மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் தொகுப்பு வழங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வண்டல் மண்ணை விவசாய நிலங்களில் பயன்படுத்த தமிழக அரசு சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தேனி மாவட்ட வாழைக்கு தனி அடையாளத்தை உருவாக்க ரூ.130 கோடி மதிப்பில் வாழைக்கான தனி தொகுப்பு திட்டம் உருவாக்கப்படும்.
  • உயர் ரக தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதற்கு 150 விவசாயிகளை இஸ்ரேல், எகிப்து, மலேசியா, நெதர்லாந்து, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
seithichurul

Trending

Exit mobile version