தமிழ்நாடு

வேளாண் பட்ஜெட்: சிறந்த இயற்கை விவசாயிக்கு ரூ.5 லட்சப் பரிசுடன் நம்மாழ்வார் விருது!

Published

on

தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனையொட்டி இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், விவசாயிகளுக்குப் பல பயனுள்ள திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

வேளாண் பட்ஜெட் (Agri Budget)

2023-2024 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை நிதியமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், விவசாயிகளுக்கு சாதகமான திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • தமிழகத்தில் மிகச் சிறந்த இயற்கை விவசாயிக்கு நம்மாழ்வாரின் பெயரில் விருதும், ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டுப் பத்திரமும் குடியரசு தினத்தில் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
  • விவசாயிகள் அனைவரும் அங்கக சான்றிதழ் பெறுவதை ஊக்குவிப்பதற்கு ஆண்டு கட்டணமாக ரூ. 10,000 மானியத் தொகை அறிவிக்கப்படும். இதற்காக ரூ.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டதாரி இளைஞர்களை தொழில் முனைவோராக்கிட ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சூரியகாந்திப் பயிர் உற்பத்தியை அதிகரிப்பதற்கு ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் விவசாயிகளுக்குத் தெரிவிக்க வாட்ஸ்ஆப் குழு உருவாக்கப்படும்.
  • நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் புதியதாக சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது சிறுதானிய திருவிழாக்கள் நடத்தப்படும். இத்திட்டம் ரூ.82 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.
  • வேளாண் பட்டப்படிப்பு பயின்றுள்ள 200 இளைஞர்களுக்கு, வேளாண்மை சார்ந்த தொழில் தொடங்குவதற்கு ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கம்பு மற்றும் கேழ்வரகு போன்ற சிறு தானியங்களை சாகுபடி செய்து, தமிழக அளவில் அதிக மகசூல் பெறும் விவசயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
seithichurul

Trending

Exit mobile version