இந்தியா

தாஜ்மஹாலை மூடிவிடுவோம்.. ஆக்ரா நகராட்சி எச்சரிக்கை!

Published

on

தாஜ்மஹாலை மூடிவிடுவோம் என ஆக்ரா நகராட்சி நோட்டிஸ் அனுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2021-2022 மற்றும் 2022-2023 நிதியாண்டுக்கான சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்டவற்றை இந்தியத் தொல்லியல் ஆய்வு மையம் செலுத்தவில்லை.

எனவே அதனை விரைந்து கட்ட வேண்டும். தவறினால் தாஜ்மஹாலை மூடி சீல் வைப்போம் என ஆக்ரா நகராட்சி நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

ஆக்ரா நகராட்சி தாஜ் மஹாலுக்கு உட்பட்ட அனைத்து கட்டிடங்களுக்கும் நிலுவையில் உள்ள வரியைச் செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வரியைச் செலுத்திய பிறகு எந்த பகுதிகளுக்கு எல்லாம் வரி தள்ளுபடி வழங்கப்படும் என்பது பின்னர் கணக்கிட்டுக் கூறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் 7 அதிசயமான அரசுடமையாக்கப்பட்ட சொத்துக்கே இந்த நிலைமையா என இது சர்ச்சை ஆன நிலையில் அதற்கு விளக்கம் அளித்துள்ள ஆக்ரா நகராட்சி, தவறுதலாக நோட்டீஸ் அனுப்பிவிட்டதாக தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version