தமிழ்நாடு

தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்: குழந்தைகள், பெரியவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்!

Published

on

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் அக்னி நட்சத்திரம் 20 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதும் இந்த நாட்களில் வெயில் சுட்டெரிக்கும் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி, முடியும் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதி தொடங்குவதாகவும் இந்த அக்னி நட்சத்திரம் 25 நாட்கள் இருக்கும் என்றும் மே 28ம் தேதி அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அக்னி நட்சத்திரம் நேரத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அத்தியாவசியத் தேவை இல்லை என்றால் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த அக்னி நட்சத்திரம் நேரத்தில் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும் என்றும் நீர் சத்து அதிகம் உள்ள உணவு பொருட்களை சாப்பிட வேண்டும் என்றும் வெப்பத்தில் இருந்து விடுபட தேவையான அவர்களை பொதுமக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கத்தரி வெயில் என்று கூறப்படும் இந்த அக்னி நட்சத்திர நாட்களான 25 நாட்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

 

seithichurul

Trending

Exit mobile version