தமிழ்நாடு

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம்: வயது வரம்பை அதிகரித்து அரசாணை!

Published

on

அரசு பள்ளி ஆசிரியர்களின் நியமனம் வயது 40 இருக்கும் நிலையில் அந்த வயது வரம்பை தற்போது அதிகரித்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமன வயது 5 ஆண்டுகள் அதிகரித்து தமிழக அரசு சற்றுமுன் அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி ஆசிரியர் நேரடி நியமனம் இதுவரை உச்ச வயதுவரம்பு பொதுப்பிரிவினருக்கு 40 ஆக இருந்த நிலையில் தற்போது 45 வயது ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதும் அதேபோல் இதர பிரிவினருக்கு 45 லிருந்து 55ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உச்சவரம்பு வயது நிறுவனம் நியமனம் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை சிறப்பு நிகழ்வாக ஒரே ஒரு முறை மட்டுமே நிர்ணயம் செய்யப்படுகிறது என்றும், 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு உச்ச வயது பொதுப்பிரிவினர்களுக்கு 42 என்றும் இதர பிரிவினருக்கு 47 ஆக நிர்ணயம் செய்யப்படுவதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான வயது வரம்பு 57 ஆக இருந்தது. மேலும் ஓய்வு வயது 58 ஆக இருந்த நிலையில் அதற்கு ஓர் ஆண்டுக்கு முன்வரை நியமனம் செய்யலாம் என்ற அரசாணை பின்பற்றப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டதை அடுத்து ஆசிரியர் நியமன வயது 59 ஆக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆசிரியர்களின் வயது வரம்பு 40 என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்ட முடிவுக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து ஆசிரியர்கள் நியமனம் வயது வரம்பை உயர்த்துவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அன்பில் மகேஷ் அவர்கள் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் இதுகுறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version