சினிமா செய்திகள்

திரையரங்குகள் மூடப்பட்டதால் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் புலம்பல்!

Published

on

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் முதல் அலை ஏற்பட்ட போது சுமார் ஆறு மாத காலங்கள் திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தன என்பதும் அதேபோல் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது தெரிந்ததே. அதன்பின்னர் கடந்த சில மாதங்களாகத் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ளதால் திரையரங்குகளுக்கு அனுமதி கிடைத்தது

அதுவும் முதலில் சில மாதங்கள் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி கிடைத்தது என்பதும், தன் பின்னரே 100% இருக்கைகளுக்கு அனுமதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திரையரங்குகளில் திறக்கப்பட்டவுடன் மாஸ்டர் மற்றும் கர்ணன் ஆகிய இரு திரைப்படங்களால் மட்டுமே திரையரங்கு உரிமையாளர்கள் லாபம் சம்பாதித்துள்ளனர்

இனி அடுத்தடுத்து புதிய படங்கள் வெளிவந்தால் லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே போல் நூற்றுக்கணக்கான கோடிகள் செலவு செய்து தயாரிக்கப்பட்ட பல திரைப்படங்கள் ரிலீஸாகாமல் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டு உள்ளதால் தொழிலாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்

seithichurul

Trending

Exit mobile version