தமிழ்நாடு

மீண்டும் கால் வலி அவஸ்தையில் கமல்: ஊன்றுகோலுடன் பிரச்சாரம்!

Published

on

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பது தெரிந்ததே. அதன் பின்னர் சில நாட்கள் ஓய்வு எடுத்து விட்டு தற்போது தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

சமீபத்தில் கோவையில் அவர் வாக்கிங் சென்று கொண்டே தேர்தல் பிரசாரம் செய்த போது அவருடன் செல்பி எடுக்க முண்டியடித்துக் கொண்டு சிலர் அவரது காலை மிதித்துவிட்டனர் அதனால் மீண்டும் அவரது காலில் வலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் ஓரிரு நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் தற்போது பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவர் மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருவதால் மீண்டும் அவருக்கு கால் வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கால் வலி அவஸ்தை காரணமாக அவர் தற்போது ஊன்று கோலுடன் பிரச்சாரம் செய்து வருகிறார். ஊன்று கோலுடன் அவர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version