சினிமா செய்திகள்

மீண்டும் அயன் – மிரட்டும் சூர்யாவின் காப்பான் டீஸர்!

Published

on

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சூர்யா இணைந்துள்ள காப்பான் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக படம் எடுக்கும் இயக்குநர் என்றால் அது கே.வி. ஆனந்த் தான். சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா என நட்சத்திர பட்டாளத்துடன் இந்திய அளவிலான அரசியலை கையிலெடுத்து இயக்குநர் கே.வி. ஆனந்த் காப்பான் படத்தை இயக்கியுள்ளார் என்பது அதன் டீஸரிலேயே தெரிகிறது.

ஹாரிஷ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். விவசாயம், அணுகுண்டு, பிரதமர், இந்தியா பாகிஸ்தான் சண்டை என பல விஷயங்களை சின்ன டீஸரில் இடம் பெற செய்து படத்தின் மீதான் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளனர்.

வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 10ம் தேதி காப்பான் படம் திரைக்கு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version