இந்தியா

மீண்டும் ஊரடங்கு.. ரயில் சேவை ரத்தாகுமா?

Published

on

டந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு போன்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. எனவே மீண்டும் ரயில் சேவை நிறுத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரிப்பால் மீண்டும் ரயில் சேவை நிறுத்தப்படுமா என்ற கேள்விக்குப் பதில் அளித்துள்ள இந்தியன் ரயில்வே தலைவர், “தற்போதைக்கு ரயில் சேவையை நிறுத்த எந்த திட்டமும் இல்லை. எனவே பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம். தேவைப்பட்டால் கூடுதல் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்தியன் ரயில்வே தலைவரின் அறிவிப்பின் படி, ரயில்களில் நெரிசல் ஏற்பட்டால், கூடுதல் ரயில்கள் இயக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

மேலும் ரயிலில் பயணம் செய்ய, கொரோனா இல்லை என்ற சான்றிதழ் தேவை என்று செய்திகள் பரவுவதற்கு மறுப்பு தெரிவித்த வரி, ரயில் பயணங்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version