உலகம்

இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: நீதிமன்றம் அருகே பயங்கரம்!

Published

on

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள், ஹோட்டல்கள் என பல்வேறு இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பால் சுமார் 351 பேர் உயிரிழந்தனர். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அங்கு மீண்டும் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்பால் 351 பேர் உயிரிழந்தனர். பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் மறப்பதற்குள் மீண்டும் குண்டுவெடிப்பு ஏற்பட்டு மக்களை பீதியடைய வைத்துள்ளது. கொழும்புவில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கம்பஹாவில் பூகொட நீதிமன்றத்தின் வளாகத்திற்கு அருகில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்த சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சம்பவ இடத்தை போலீசார் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பால் எந்த உயிர் சேதமோ, பாதிப்போ இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending

Exit mobile version