சினிமா செய்திகள்

’விக்ரம்’ முடிந்த பின் ‘பாபநாசம் 2’ படம் தான்: கமலுக்கு ஜோடி யார் தெரியுமா?

Published

on

கமலஹாசன் நடித்த ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த பின்னர் அடுத்ததாக அவர் எந்த படத்தில் நடிப்பார் என்றும் ’தலைவன் இருக்கிறான்’ படத்தில் நடிப்பார் என்றும் ‘இந்தியன் 2’ படத்தை முடித்து கொடுப்பார் என்றும் கூறப்பட்ட நிலையில் ‘பாபநாசம் 2’ படத்தை முடிக்க அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகை ஸ்ரீபிரியா ‘பாபநாசம் 2’படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக கமலுக்காக காத்திருக்கின்றார். இதனை அடுத்து ‘பாபநாசம் 2’ படத்தில் அவர் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் இந்த படத்தை ஸ்ரீபிரியா இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாபநாசம் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக கெளதமி நடித்த நிலையில் தற்போது இருவரும் கருத்து வேறுபாட்டுடன் இருப்பதால் அவர் நடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. எனவே கமல்ஹாசன் ஜோடியாக நதியா அல்லது மீனாவை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்து வருவதாகவும் மீனா நடிக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகை மீனா கமல்ஹாசனுடன் அவ்வை சண்முகி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version