சினிமா செய்திகள்

’தளபதி 66’ படத்தை அடுத்து ‘தல 61’ படத்திலும் இணையும் சரத்குமார்?

Published

on

தளபதி விஜய் நடிக்கும் ‘தளபதி 66’ திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது என்பதும் இந்த படத்தின் பூஜையில் கலந்து கொண்ட சரத்குமார் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பது உறுதி செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் தற்போது அவர் ’அஜித் 61’ படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

’அஜித் 61’ படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் கிட்டதட்ட முடிவு செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் மோகன்லால் மற்றும் நாகார்ஜூனா ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் படக்குழுவினர் கேட்ட கால்ஷீட் தேதி மோகன்லாலிடம் இல்லை என்பதால் அவருக்கு பதிலாக சரத்குமாரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து படக்குழுவினர் சரத்குமாரிடம் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரின் படங்களிலும் ஒரே வேடத்தில் முக்கிய வேடங்களில் சரத்குமார் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

seithichurul

Trending

Exit mobile version