தமிழ்நாடு

விஜய்யை அடுத்து சொகுசுக்கார் வரி வழக்கை சந்திக்கும் தனுஷ்!

Published

on

நடிகர் விஜய் தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பதிவு செய்த வழக்கை நீதிபதி சுப்பிரமணியம் அவர்கள் தள்ளுபடி செய்தார் என்பதும் அதன் பின் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து விஜய் மேல்முறையீடு செய்த நிலையில் மேல்முறையீடு வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய்யை அடுத்து தனுஷும் தான் வாங்கிய வெளிநாட்டுக்கு நுழைவு வரியை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தர். நடிகர் தனுஷ் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து கார் ஒன்றை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் பதிவு செய்த வழக்கில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

தனுஷ் வாங்கிய காருக்கு 60 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நுழைவு வரியாக செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்தநிலையில் 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தபோது தனுஷ் தரப்பில் இருந்து யாரும் ஆஜராகவில்லை. இதனை அடுத்து ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 5ஆம் தேதி அதாவது நாளை தனது வெளிநாட்டு நுழைவு வரி வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யை அடுத்து தனுஷும் வெளிநாட்டு கார் வழக்கை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version