சினிமா செய்திகள்

ஒளிப்பதிவு சட்டத்திருத்தம்: சூர்யாவை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் எதிர்ப்பு!

Published

on

மத்திய அரசு சமீபத்தில் ஒளிப்பதிவாளர் சட்ட திருத்தம் கொண்டு வந்தது என்பதும் இந்த சட்டத் திருத்தத்திற்கு நடிகர் சூர்யா கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் தனது டுவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்தார் என்பதை பார்த்தோம்.

முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க தயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் முதன்முதலாக கமல்ஹாசனும், அதனையடுத்து சூர்யா எதிர்ப்பு தெரிவித்து பிள்ளையார் சுழி போட்டு வைத்தனர். இதனை அடுத்து தற்போது பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களும் இந்த சட்டத் திருத்தத்திற்கு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

மத்திய அரசின் ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா கருத்து சுதந்திரம் மீதான தாக்குதல் என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர்களை அடுத்து மேலும் சிலரும் இந்த ஒளிப்பதிவு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த சட்ட திருத்தத்தை அமல்படுத்துவதில் இருந்து பின்வாங்க போவதில்லை என்றும் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version