சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயனை அடுத்து ஆர்யா: கமல்ஹாசனின் வேற லெவல் கால்குலேஷன்!
சிவகார்த்திகேயனை அடுத்து ஆர்யாவை கமல்ஹாசன் தட்டி தூக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன .
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிப்பு சமீபத்தில் வெளியானது .
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் ரைட்ஸை விஜய் டிவிக்கு விற்பனை செய்ய பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் ஒரு மிகப்பெரிய தொகையை அதிலிருந்தே கமலஹாசனுக்கு கிடைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது .
இந்த நிலையில் சிவகார்த்திகேயனை அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் ஆர்யா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சார்பாட்டா பரம்பரை படத்திற்கு பிறகு ஆர்யாவுக்கு தமிழ் திரை உலகில் மிகப்பெரிய மார்க்கெட் இருப்பதால் இந்த படத்திலும் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.