வணிகம்

கத்தாரைத் தொடர்ந்து மலேசியா.. நாமக்கல் முட்டை உற்பத்தியாளர்களுக்கு ஜாக்பாட்!

Published

on

தமிழ்நாட்டின் நாமக்கல்லில் இருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு முட்டை உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் கத்தாரைத் தொடர்ந்து மலேசியாவுக்கு நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி தொடங்கி உள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்பு மலேசியாவில் முட்டைக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யக் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

முதற்கட்டமாகத் திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியாவுக்கு 1 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

முட்டைகளை மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்யும் முதல் ஆர்டரினை பெற்ற காவேரி பயோ ப்ரோட்டின்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

மேலும் வரும் நாட்களில் அதிகளவில் முட்டைகள் மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு அதிகளவில் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், சில நாட்களாக அங்கு மீண்டும் பறவை காய்ச்சல் தாக்குதல் ஏற்பட்டு, முட்டை மற்றும் கோழி கறிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுபக்கம் முட்டையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

Trending

Exit mobile version