இந்தியா

போஸ்ட்பெய்ட் கட்டணமும் உயர்வா? தொலைத்தொடர்பு நிறுவனங்களின் முடிவால் பயனர்கள் அதிர்ச்சி!

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரிபெய்டு கட்டணத்தை ஏர்டெல், வோடபோன் மற்றும் ஜியோ நிறுவனங்கள் உயர்த்திய நிலையில் தற்போது போஸ்ட்பெய்டு கட்டணத்தையும் உயர்த்த இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிசம்பர் 1-ஆம் தேதி முதல் பிரிபெய்டு கட்டணத்தை உயர்த்துவதாக ஜியோ நிறுவனம் தெரிவித்திருந்தது என்பதும் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே ஏர்டெல் மற்றும் வோடோபோன் ஆகிய இரண்டு நிறுவனங்களும் பிரீபெய்டு கட்டணத்தை வெகுவாக உயர்த்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக அனைத்து தொலைத்தொடர்பு துறை வாடிக்கையாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி பிரிபெய்டு கட்டணத்தை அடுத்து போஸ்ட்பெய்டு கட்டணத்தையும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உயர்ந்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பயனர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பிரிபெய்டு கட்டணத்தை உயர்த்தியவுடன் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிம்கார்டு வாங்க பயனாளர்கள் போட்டிபோட்டு வந்தது தெரிந்ததே.

இந்த நிலையில் போஸ்ட்பெய்டு கட்டணத்தையும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உயர்த்தினால் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் குவிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version