தமிழ்நாடு

ஓட்டு போட்டுவிட்டு கோவை வந்துவிட்டேன்: கமல் டுவீட்

Published

on

தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் காலை 9 மணி வரை 13 சதவீதத்திற்கும் அதிகமாகவும், 11 மணி வரை 26 சதவீதத்திற்கும் அதிகமாகவும் வாக்குப்பதிவு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் இன்று காலையே வாக்களித்து விட்டார்கள் என்பதும் அதில் ஒருவரான மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள அரசு பள்ளியில் வாக்களித்தார் என்பதும் அவருடன் அவருடைய இரண்டு மகள்களான ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோர் வாக்களித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னையில் வாக்களித்துவிட்டு உடனடியாக தான் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதி கமல்ஹாசன் சென்றுவிட்டதாக சற்றுமுன் தகவலை வெளியானது. இதனை உறுதி செய்தது போல் கமலஹாசன் தனது டுவிட்டரில் இதுகுறித்து ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மக்கள் தீவிரமாக வாக்களித்து வருகிறார்கள் என்பதில் பெருமகிழ்ச்சி. ஜனநாயகக் கடமையை குடும்பத்துடன் நிறைவேற்றிவிட்டு கோவைக்கு வந்துவிட்டேன். கடமையை சரியாக செய்பவர்களுக்கு உரிமைகள் தானே வந்தடையும். செய்யுங்கள்.

Trending

Exit mobile version