தமிழ்நாடு

பழ.கருப்பையாவை அடுத்து கமல் கட்சியில் இணைந்த மற்றொரு பிரபலம்!

Published

on

அதிமுக மற்றும் திமுக கூட்டணிக்கு சவாலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையில் ஒரு புதிய கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் இப்போதைக்கு ஒரு சில கட்சிகள் இணைந்து இருந்தாலும் அதிமுக மற்றும் திமுகவுடன் தொகுதி பங்கீட்டின் போது அதிருப்தி ஏற்பட்டால் அதன் பிறகு ஒரு சில கட்சிகள் இந்த கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஒரு சில பிரபலங்களும் இணைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் பழம்பெரும் அரசியல்வாதி பழ கருப்பையா அவர்கள் கமல்ஹாசன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் என்பவர் கமல் கட்சியில் இணைந்துள்ளார். இந்த கட்சியில் இணைந்த பின் அவர் கூறியபோது ’அப்துல் கலாம் பெயரில் ஒரு கட்சியை தொடங்கியதாகவும் அந்த கட்சியை பதிவு செய்யவிடாமல் பாஜக அரசு தடுத்ததாகவும் கூறினார். எனவே அறிவார்ந்த அரசியல் காலத்தின் கட்டாயம் என்றும் அப்துல் கலாம் கனவை நனவாக்க தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version