தமிழ்நாடு

ஒரு மாதத்திற்கு பின் டீசல் விலை குறைவு: இன்றைய விலை நிலவரம்!

Published

on

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த ஒரு மாதமாக உயரவும் இல்லை, இறங்கவும் இல்லை என்ற நிலையில் ஒரே நிலையாக இருந்தது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். இருப்பினும் பெட்ரோல் டீசலுக்கான வரிவிதிப்பை மத்திய மாநில அரசுகள் குறைத்து விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்தபோது பெட்ரோல் மீதான வரியை மூன்று ரூபாய் குறைத்ததை அடுத்து பெட்ரோல் விலை மட்டும் 3 ரூபாய் குறைந்தது. ஆனாலும் டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்கவில்லை என்பதால் டீசல் விலை குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பின் தற்போது டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. சென்னையில் டீசல் விலை இன்று 19 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து இன்று ரூ.94.20 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு பெட்ரோல் மீதான வரியை குறைத்தால் பெட்ரோல் விலை ரூ.99.47 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை என்றாலும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறித்து பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து கொண்டே வருவதை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவிலும் குறைய வேண்டும். ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் குறைக்காமல் இருப்பது பொது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version