இந்தியா

ஒமிக்ரான் வைரஸை அடுத்து மீண்டும் கர்நாடகாவில் KFD வைரஸ்!

Published

on

கர்நாடக மாநிலத்தில் தான் இந்தியாவில் முதல் முறையாக ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது 50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் KFD வைரஸ் எனும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் கடந்த 1957ஆம் ஆண்டு முதல் முறையாகக் KFD வைரஸ் என்ற புதிய வைரஸ் கண்டறியப்பட்டது. குரங்குகள் மூலம் பரவும் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் என்பதும் உடலின் பல பாகங்களில் இருந்து இரத்தப்போக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

குரங்குகளை கடித்த பூச்சிகள் மனிதர்களையும் கடிக்கும் போது இந்த நோய் பரவும் என்றும் கொரோனா வைரஸ் போன்றோ அல்லது காற்றிலோ இந்த வைரஸ் பரவாது என்றும் கூறப்படுகிறது. அவ்வப்போது இந்தியாவில் இந்த வைரஸ் எட்டி பார்க்கும் நிலையில் தற்போது கர்நாடகாவில் ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா உள்பட பல நாடுகளில் KFD வைரஸ் இருந்தாலும் அவ்வப்போது இது திடீரென பரவும் என்றும் பின்னர் திடீர் திடீரென மறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது திடீரென KFD வைரஸ் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version