இந்தியா

500 ஊழியர்களை வேலைநீக்கம் செய்த நிறுவனம்.. திடீரென 600 ஊழியர்களை வேலைக்கு எடுப்பதாக அறிவிப்பு!

Published

on

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 500 ஊழியர்களை வேலைநீக்கம் செய்த நிறுவனம் தற்போது 600 ஊழியர்களை புதிதாக நியமனம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருளாதார மந்த நிலை, பணவீக்கம், வட்டி உயர்வு உள்பட பல்வேறு காரணங்களாலும் சரியாக செயல்படாத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், ட்விட்டர், பேஸ்புக் உள்பட பல பெரிய நிறுவனங்களும் ஒரு சில ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர். சிக்கன நடவடிக்கைக்காக இந்த வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விளக்கம் கூறப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு 600-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்த ’கார்ஸ் 24’ என்ற நிறுவனம் தற்போது 500க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. முதல் கட்டமாக தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கு வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படும் என்றும் தொழில்நுட்பம், தயாரிப்பு, டேட்டா அறிவியல், பொறியியல், வணிகம், மனித வளம், நிதி சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை உள்ளிட்ட துறைகளில் பதவிக்கு ஆள் இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இது குறித்து கார்ஸ் 24 நிறுவனத்தின் சிடிஓ ஜிதேந்திர அகர்வால் அவர்கள் கூறிய போது ’நிறுவனத்தை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தவும் ஐபிஓ வெளியிட இருப்பதை அடுத்தும் எங்கள் நிறுவனம் விரைவில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் சுமார் 600 ஊழியர்களை மோசமான செயல் திறன் மற்றும் செலவு குறைப்பு காரணமாக வேலை நீக்கம் செய்தோம். இந்த நிலையில் தற்போது வேலைக்கு ஆள் தேவைப்படுவதால் வேலைக்கு அமர்த்த இருக்கிறோம். ஆனால் ஏற்கனவே வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் அமர்த்தப்பட மாட்டார்கள், புதிய ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம் என்றும் எங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதற்கு விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version