சினிமா செய்திகள்

கேஜிஎப் 3 ரூ.1000 கோடி வசூல் செய்யும், கேஜிஎப் 4 படமும் உண்டு!

Published

on

சமீபத்தில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் ரூபாய் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படத்தின் இறுதியில் கேஜிஎப் 3 திரைப்படம் உருவாகும் என்ற வகையில் முடிக்கப் பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் கேஜிஎப் 3 திரைப்படத்தின் திரைக்கதை எழுதும் பணி தொடங்கி விட்டதாகவும் வரும் ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய படங்களை விட கேஜிஎப் 3 மிகவும் பிரமாண்டமாக உருவாக இருப்பதாகவும் இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 1000 கோடி வசூல் செய்யும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் .

அதுமட்டுமின்றி ஆகிய கேஜிஎப் 4 படமும் உருவாகும் என்றும் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கேஜிஎப் திரைப்படத்திற்கு தொடர்ச்சியாக கிடைத்து வரும் ஆதரவை அடுத்தே, அடுத்தடுத்த பாகங்களை உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version