சினிமா செய்திகள்

கே.எஃப்ஜி 2’ டிரைலருக்கு பின் அதிர்ச்சியில் ‘பீஸ்ட்’ படக்குழுவினர்: அதிரடி முடிவெடுத்ததாக தகவல்

Published

on

விஜய் நடித்த ‘பீஸ்ட்’ மற்றும் யாஷ் நடித்த ’கே.எஃப்ஜி 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு தினங்களில் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இந்த நிலையில் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் கிட்டத்தட்ட 1000 திரையரங்குகள் இந்த படத்திற்கு கிடைக்கும் என்றும் இந்தியா முழுவதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது

ஆனால் நேற்று மாலை கேஜிஎப் 2 திரைப்படத்தின் டிரைலர் வந்த பிறகு ‘பீஸ்ட்’ படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். கேஜிஎப் 2 ட்ரெய்லர் மிரட்டும் வகையில் இருந்ததை அடுத்து இதைவிட மிரட்டும் காட்சிகளில் ‘பீஸ்ட்’ டிரைலரை வெளியிட வேண்டும் என்றும் அப்போது தான் கேஜிஎஃப் 2 படத்திற்கு இணையாக ‘பீஸ்ட்’ படத்தை விளம்பரம் செய்ய முடியும் என்றும் படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது

இதனை அடுத்து ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்றுள்ள மாஸ் காட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து டிரைலரை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் ஏப்ரல் 1ஆம் தேதி இந்த ட்ரெய்லர் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

கேஜிஎப் 2 படத்தின் டிரைலருக்கு பின்னர் இந்த படத்தை வெளியிட தமிழகத்தில் உள்ள பல திரையரங்கு உரிமையாளர்கள் மிகப்பெரிய அளவில் ஆர்வம் காட்டி வருவதால் பீஸ்ட் படத்திற்கு எதிர்பார்த்த திரையரங்குகள் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

 

Trending

Exit mobile version