இந்தியா

பரவும் ஜிகா வைரஸ்: கேரளாவை அடுத்து இன்னொரு மாநிலத்திலும்….

Published

on

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினமும் 20 ஆயிரத்தை தாண்டி வரும் நிலையில் ஜிகா வைரஸ் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே 50க்கும் அதிகமானோர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேரளாவை அடைத்து மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே நகரில் ஜிகா வைரஸ் பரவி உள்ள தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே நகரில் உள்ள ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவரிடமிருந்து வேறு யாருக்கும் வராத வகையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து மாநிலங்களும் சிக்கலில் உள்ள நிலையில் தற்போது ஜிகா வைரஸ் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் ஜிகா வைரஸை கட்டுப்படுத்த அம்மாநில சுகாதாரத்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் அதேபோல் மகாராஷ்டிர மாநில அரசும் ஜிகா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதும் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது கொரோனா வைரஸ் நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழகத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version