தமிழ்நாடு

ஷவர்மாவுக்கு தமிழகத்தில் தடை? அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Published

on

கேரளா முழுவதும் ஷவர்மாவுக்கு தடை விதிக்கப்பட்டதை போல் தமிழகத்திலும் ஷவர்மாவுக்கு தடை விதிக்க ஆலோசனை செய்து வருவதாக சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரள மாணவி ஒருவர் ஷவர்மா சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து கேரளாவில் உள்ள அனைத்து ஷவர்மா கடைகளுக்கும் தடை விதித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் மாணவி ஒருவர் பலியானதை அடுத்து தமிழகத்திலும் அனைத்து ஷவர்மா கடைகளிலும் சோதனை நடந்தது என்பதும் பல ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன சிக்கன்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து அடுத்து தமிழகத்திலும் ஷவர்மாவுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எனவே விரைவில் ஷவர்மாவுக்கு தமிழகத்தில் தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் ஷவர்மா கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பாதிக்கப்பட்டாலும் பொது மக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டு வருகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version