இந்தியா

கர்நாடகா, மத்திய பிரதேசத்தை அடுத்து ஆந்திராவிலும் ஹிஜாப்புக்கு தடையா?

Published

on

கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து மாணவிகள் வர தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த விவகாரம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்படுவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கர்நாடகா மத்தியப் பிரதேசத்தை அடுத்து தற்போது ஆந்திராவில் உள்ள ஒரு கல்லூரியிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் வெளியே தடுத்து நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது .

ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா என்ற பகுதியில் உள்ள லயோலா கல்லூரியில் மாணவிகள் சிலர் சீருடை அணிந்து அதற்கு மேல் ஹிஜாப் அணிந்து இருந்தனர்.

இத்தனை நாட்களாக இதேபோன்றுதான் தாங்கள் கல்லூரிக்கு வந்ததாகவும் ஆனால் தற்போது ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்துள்ளதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகா, மத்திய பிரதேசம், ஆந்திரா என ஒவ்வொரு மாநிலமாக ஹிஜாப் விவகாரம் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version