இந்தியா

2023ல் மட்டும் 68,000 பேர் வேலைநீக்கம்.. இன்று மீண்டும் 1500 பேர்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்!

Published

on

2023 ஆம் ஆண்டு பிறந்து ஒரு மாதம் மட்டுமே முடிந்துள்ள நிலையில் அதற்குள் சுமார் மூலம் 68,000 பேர் உலகம் முழுவதும் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. அந்த வகையில் இன்று மேலும் 1500 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே உலகம் முழுவதும் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அது மட்டும் இன்றி பணவீக்கம் வங்கிகளின் வட்டி விகிதம் உயர்வு உள்பட பல்வேறு காரணங்கள் காரணமாக வேலை நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கூகுள் நிறுவனத்தில் இருந்து 12000 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டதை யாருமே எதிர்பார்க்கவில்லை என்பதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்தியா உள்பட உலகின் முன்னணி நிறுவனங்களில் தனது சேவையை செய்து வரும் OLXநிறுவனம் 15000 ஊழியர்களை 1500 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

#image_title

நெதர்லாந்தை தலைமை இடமாக கொள்ள OLX நிறுவனம் இந்தியா உள்பட உலகம் முழுவதும் சுமார் 10,000 பணியாளர்களை கொண்டுள்ளது. இந்த நிலையில் இவற்றில் 15 சதவீதம் அதாவது 1500க்கும் மேற்பட்ட ஊழியர்களை குறைக்க முடிவு செய்திருப்பதாக முன்னணி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு இந்தியாவில் தனது வணிகத்தை தொடங்கிய OLX இந்தியாவில் மிகப் பெரிய வாகன சந்தையை ஏற்படுத்தியது என்பதும் நல்ல லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்ததாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2020 ஆம் ஆண்டு OLX ஆட்டோக்கள் இந்தியாவில் உள்ள பொறியியல் மற்றும் செயல்பாட்டு குழுக்களை கவர்ந்தது என்பதும் பொருளாதார அளவில் இந்நிறுவனம் நல்ல லாபத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு, உக்ரைன் போர் உள்பட பல்வேறு காரணங்களால் OLX நிறுவனம் தற்போது சிக்ன நடவடிக்கை எடுத்துள்ளது. எங்கள் நிறுவனத்தில் உள்ள பணியாளர்களின் அளவை நாங்கள் குறைக்க விரும்புகிறோம். எதிர்கால லட்சியங்களை பூர்த்தி செய்ய இந்த நடவடிக்கை அவசியம் என OLX நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள பெரிய நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்த ஆண்டு மட்டும் 68,149 பேர்களை வேலைநீக்கம் செய்துள்ள நிலையில் இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஊழியர்கள் ஒருவித அச்சத்துடன் வேலை பார்த்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version