சினிமா செய்திகள்
முடிந்தது அஜித்தின் இங்கிலாந்து பயணம்: அடுத்து எந்த நாடு தெரியுமா?
நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக தனது குழுவினருடன் இங்கிலாந்து நாட்டிற்கு பைக் பயணம் சென்றார் என்பதும் இங்கிலாந்து நாட்டில் அவர் பைக் ஓட்டுவது போன்றும் பெட்ரோல் நிரப்பும்போது போன்றுமான புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டின் பைக் பயணத்தை முடித்துவிட்டு அவர் தற்போது பெல்ஜியம் நாட்டிற்கு சென்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மாத இறுதியில் தான் அவர் தனது பைக் பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்புவார் என்றும் அதன்பிறகு அவர் ’அஜித் 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக புனே செல்ல உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புனேவில் நடைபெறும் ’அஜித் 61’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் மஞ்சுவாரியர் உள்பட பலர் இணைந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.