தமிழ்நாடு

தேர்தல் முடிந்ததும் மீண்டும் ஊரடங்கா? ஆலோசனையில் தமிழக அரசு!

Published

on

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு 2000ஐ தாண்டி உள்ளது என்பதும் குறிப்பாக சென்னை, கோவை, திருவள்ளூர், தஞ்சை, செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் மிக அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது என்பதும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேர்தல் முடிந்த பின்னர் இரவு நேர ஊரடங்கு, தனியார்துறை ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியமர்த்துதல் உள்பட ஒரு சில கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் உள்ள தளர்வுகள் மீண்டும் செயல்படுத்த வாய்ப்பிருப்பதாகவும் அதாவது வழிபாட்டுத்தலங்கள், மத நிகழ்ச்சிகள், அரசியல் சமூக நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்த தடை விதிக்கப்படும் என்றும் பொது போக்குவரத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் நீச்சல் குளங்கள,. பொழுதுபோக்கு பூங்காக்கள், ஆகியவற்றுக்கு இருந்த தடை மீண்டும் நடைமுறைப்படுத்தலாம் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version