தமிழ்நாடு

துபாயை அடுத்து அமெரிக்கா, தென்கொரியா: மீண்டும் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்!

Published

on

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சமீபத்தில் துபாய் சென்று சுமார் 6500 கோடி முதலீட்டை பெற்று வந்தார் என்றும் ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டு வந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் துபாய் பயணம் வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து விரைவில் அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு தமிழக முதல்வர் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது .

இதுகுறித்து அமைச்சர் தென்னரசு கூறியபோது அமெரிக்கா மற்றும் தென் கொரிய நாடுகள் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் விரைவில் அவருடைய அடுத்த கட்ட சுற்றுப்பயணம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார் .

எனவே அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுகு விரைவில் முதல்வரின் சுற்றுப்பயணம் நடைபெறும் என்றும் இந்த சுற்றுப் பயணத்தின் போதும் அவர் ஏராளமான முதலீடுகளை தமிழகத்துக்கு கொண்டு வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் துபாய் சென்றது போல் குடும்பத்தினரை அழைத்து சென்று சர்ச்சைக்குள்ளாக வேண்டாம் என திமுகவினர் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version