இந்தியா

நாயுடன் நடைப்பயிற்சி செய்த ஐ.ஏ.எஸ் தம்பதிகள் மீது நடவடிக்கை!

Published

on

நாயுடன் நடைப்பயிற்சி செய்த ஐ.ஏ.எஸ் தம்பதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாயுடன் நடைப்பயிற்சி செய்தது தவறா என்ற கேள்வி அனைவருக்கும் இருந்த நிலையில் அவர் நாயுடன் நடை பயிற்சி செய்வதற்காக ஒட்டுமொத்த மைதானத்தையும் காலி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் குமார் மற்றும் அவரது மனைவி டெல்லியில் உள்ள தியாகராஜா விளையாட்டு மைதானத்தில் தினந்தோறும் நடை பயிற்சி செய்வார்கள். அப்போது நடைப்பயிற்சி செய்யும்போது எந்தவித இடைஞ்சலும் இருக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் நடை பயிற்சிக்கு வரும் நேரத்தில் மைதானத்தில் வீரர்கள் விளையாட்டு வீரர்கள் யாரும் இருக்கக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு போடப்பட்டதாக தெரிகிறது.

அது மட்டுமின்றி மைதான ஊழியர்கள் நடைபயிற்சி செய்வதற்காகவே சுத்தம் செய்ய உத்தரவிட்டதாகவும் கூறப்பட்டது. இது குறித்த தகவல்கள் இணையதளங்களில் வைரலான நிலையில், இதுகுறித்த புகைப்படமும் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த உள்துறை அமைச்சகம் ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் உடனடியாக அருணாச்சல பிரதேசத்திற்கு இட மாற்றம் செய்துள்ளனது., இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version