சினிமா செய்திகள்

இயக்குநர் சங்கர் வழியில் தெலுங்கு ஹீரோ உடன் இணையும் இயக்குநர் லிங்குசாமி..!

Published

on

இயக்குநர் சங்கர் வழியில் இயக்குநர் லிங்குசாமி தற்போது தெலுங்கு ஹீரோ ஒருவருடன் இணைந்து தனது முதல் தெலுங்கு படத்தை இயக்க உள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் இயக்குநர் சங்கர் தெலுங்குவில் முன்னணி நாயகன் ஆக இருக்கும் நடிகர் ராம் சரண் உடன் இணைந்து படம் எடுக்கப்போவதாக அறிவித்திருந்தார். அதன் மூலம் சங்கர் தனது முதல் தெலுங்கு படத்தை இயக்க உள்ளார். இந்த வழியில் தற்போது இயக்குநர் லிங்குசாமியும் தெலுங்கு படத்தை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இதற்காக லிங்குசாமி தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி உடன் இணைந்து தனது முதல் தெலுங்கு படத்தில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். லிங்குசாமியின் பையா மற்றும் சண்டக்கோழி ஆகிய படங்கள் தமிழில் இருந்து தெலுங்கு மொழியில் டப்பிங் மட்டும் செய்யப்பட்டு வெளியானதற்கே அங்கு பெரும் வெற்றியைப் பெற்றது.

இதனால், லிங்குசாமி-க்கு தெலுங்கு திரை உலகில் ஏற்கெனவே நன்மதிப்பு உள்ளது. நடிகர் ராம் பொத்தினேனியின் 19-வது படத்தை லிங்குசாமி இயக்க உள்ளார். இந்தப் படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலுமே எடுக்கப்பட்டு வெளியாகிறது.

Trending

Exit mobile version