Connect with us

கிரிக்கெட்

கோலி இல்லாத அணியை வழிநடத்தி ஆஸி.,யை வீழ்த்திய ரஹானே… வெற்றிக்குப் பின் ஆற்றிய டிரெஸ்ஸிங் ரூம் உரை! #Video

Published

on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை அந்த நாட்டின் மண்ணிலேயே வீழ்த்தி, சில நாட்களுக்கு முன்னர் வரலாற்றுச் சாதனைப் படைத்தது இந்திய கிரிக்கெட் அணி. இந்நிலையில் அணியின் கேப்டன் அஜிங்கியே ரஹானே, வெற்றிக்குப் பின்னர் அணியினர் மத்தியில் ஆற்றும் நெகிழ்ச்சி உரை வைரலாகி உள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மிக நீண்ட தொடர் சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது. ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்த இந்திய அணி, 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

இதில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி, 2-1 என்ற ரீதியில் கைப்பற்றியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி, டி20 தொடரை 2-1 என்று கைப்பற்றியது. பின்னர் ஆரம்பித்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி, வரலாற்றுப் படுதோல்வி அடைந்தது. எப்படியும் டெஸ்ட் தொடரில் 4-0 என்ற கணக்கில் இந்தியா மண்ணைக் கவ்வும் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான்கள் கணித்துக் கொண்டிருந்தனர்.

அதற்கு ஏதுவாக இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, சொந்த காரணங்களுக்காக தாயகம் திரும்பினார். பல முன்னணி வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டது. குழப்பமான சூழலில் களமிறங்கிய இந்திய அணி, அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்டது.

தொடர்ந்த நடந்த மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற வேண்டியிருந்தது. ஆனால் தன் அசாத்திய பேட்டிங் மூலம் இந்திய அணி, அந்த வெற்றியைத் தடுத்து நிறுத்தி ஆட்டத்தை டிரா செய்தது.

எல்லா பகைகளையும் தீர்த்துக் கொள்ள ஏதுவாக கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி அமைந்தது. முழு பலத்துடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. குழுவாக இந்திய அணியின் செயல்பாடு மூலமும் வலுவான ஆஸ்திரேலிய அணி வீழ்த்தப்பட்டது. தொடரையும் இந்தியா 2- 1 என்ற ரீதியில் கைப்பற்றி கெத்துக் காட்டியது.

இந்நிலையில் 4வது டெஸ்ட் வெற்றிக்குப் பின்னர், அணியினருடன் டிரெஸ்ஸிங் ரூமில் கேப்டன் அஜிங்கியே ரஹானே உரை ஆற்றியபோது, ‘முதல் டெஸ்டில் நடந்ததற்கும் அதன் பின்னர், அந்தத் தோல்வியிலிருந்து நாம் பாடம் கற்று மீண்டு வந்ததும் மறக்க முடியாத ஒன்று. இதைப் போன்ற வெற்றிகள் அடிக்கடி கிடைத்து விடாது. ஆனால் நாம் அதைச் செய்து காட்டினோம்.

இந்தத் தொடரைப் பொறுத்தவரையில் அணியில் இருக்கும் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருந்தது என்பது உண்மை. அது தான் மிகவும் மன மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுக்கும் விஷயமாக எனக்கு இருக்கிறது. அணியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று நெழிச்சித் ததும்ப பேசினார். சுற்றி இருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், ரஹானே பேச பேச கைத்தட்டி உற்சாகப்படுத்தினார்கள். இது குறித்தான வீடியோவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

 

இந்தியா5 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!