இந்தியா

கோவாக்சின் தடுப்பூசி விலை திடீர் ஏற்றம்: ஒரு டோஸ் எவ்வளவு தெரியுமா?

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் சுமார் மூன்றரை லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் மே 1ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேல் உள்ள தகுதி உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் ஏற்கனவே கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் ஒன்றான கோவிஷீல்டு விலையை உயர்த்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் கோவிஷீல்டை அடுத்து கோவாக்சின் என்ற தடுப்பூசியின் விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு ஒன்றில் தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.600 என மாநில அரசுகளுக்கும் ரூ.1200 என தனியார் மருத்துவமனைகளுக்கும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. தடுப்பூசி விலை உயர்வு பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும் மாநில அரசுகள் பொது மக்களுக்கு இலவசமாகவே தடுப்பு ஊசியை செலுத்தி வருகின்றன என்பதும் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு இலவசமாகவே தடுப்பூசியை வினியோகம் செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version