தமிழ்நாடு

சென்னையை அடுத்து மேலும் சில மாவட்டங்களில் கோவில்களில் பக்தர்கள் வருகைக்கு தடை!

Published

on

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து சென்னையில் உள்ள அம்மன் மற்றும் முருகன் கோவில்களில் பக்தர்கள் வருகை தர தடை விதிக்கப்பட்டது. நேற்று சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் சென்னை வடபழனி கோயில் உள்பட முக்கிய கோவில்களில் ஆடி மாத திருவிழாக்கள் நடத்த தடை என்றும் பக்தர்கள் கோவிலுக்கு வர தடை என்றும் ஆனால் அதே நேரத்தில் ஆகம விதிப்படி பூஜைகள் நடக்கும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்தது.

இந்த நிலையில் சென்னையை அடுத்து நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்பட சில பகுதிகளில் உள்ள முக்கிய கோவில்களில் பக்தர்கள் வருகை தர தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் மூன்றாம் தேதி வரை ஆடி திருவிழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருச்செந்தூர், குலசேகரபட்டினம் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோவில், பாபநாசம் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதேபோல் கோவையில் மருதமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் இன்றும் நாளையும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோவையில் மூன்றாம் தேதியும் எட்டாம் தேதியும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version