சினிமா செய்திகள்

‘டாக்டர்’ வெற்றியை அடுத்து மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன் – நெல்சன் கூட்டணி

Published

on

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘டாக்டர்’ திரைப்படம் நேற்று வெளியானது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படம் அனைத்து ஊடகங்களிலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்த நிலையில் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இந்த படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் ‘டாக்டர்’ திரைப்படத்திற்கு தான் முழு அளவில் திரையரங்குகள் நிரம்பி உள்ளதாகவும் கொரோனா இரண்டாவது அலைக்கு மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘டாக்டர்’ மட்டுமே என்றும் திரையுலக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ‘டாக்டர்’ படத்தின் வெற்றியை அடுத்து ‘டாக்டர்’ நெல்சன், விஜய் நடித்துவரும் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் டாக்டர் வெற்றியால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய்யின் பீஸ்ட் படத்தை அடுத்து மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை நெல்சன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்து ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய இரண்டு வெற்றிப்படங்களை இயக்கிய நெல்சன் பீஸ்ட் படத்தின் வெற்றி படமாக்கி ஹாட்ரிக் வெற்றி பெறுவார் என்றும் அதன் பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணையும் படமும் வெற்றிப் படமாகும் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending

Exit mobile version