இந்தியா

அம்பானியை அடுத்து ஊடகத்துறையில் கால்பதிக்கும் அதானி!

Published

on

அம்பானி குழுமத்தை அடுத்து தற்போது அதானி குழுமம் ஊடகத்துறையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதால் ஊடகத்துறை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அம்பானி குழுமம் நெட்வொர்க் 18 என்ற செய்தி ஊடகத்தை வாங்கியது என்பதும் தற்போது அது தமிழ் உள்பட பல மொழிகளில் செய்து ஊடகமாகவும், தொலைக்காட்சி ஊடகமாகவும் இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அம்பானியை அடுத்தது அதானியும் ஊடகத் துறையில் கால்பதித்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குஜராத் மாநிலத்தை சேர்ந்த அதானி குழுமம் பல்வேறு துறைகளில் குறிப்பாக தொழில்நுட்பம், தூய்மை, பசுமைப் பொருளாதாரம், எரிசக்தி, துறைமுகம், வேளாண் பாதுகாப்பு, விண்வெளி உள்பட பல துறைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக அதானி குழுமம் ஊடகத்துறையில் கால் வைக்க உள்ளதாகவும் முதல் கட்டமாக தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உலகத்தில் கால்வைக்கும் அதானி குழுமம், அதன்பிறகு அச்சு ஊடகத்திலும் கால்பதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், ‘அரசியல், நிதி மற்றும் வணிகம் ஆகிய துறைகளில் அனுபவம் வாய்ந்த மூத்த பத்திரிகையாளர் சஞ்சய் புகாலியா அவர்கள் தங்களது ஊடக நிறுவனத்திற்கு தலைமை பொறுப்பு ஏற்பார் என்றும் அவர் CNBC உள்பட பல ஊடகங்களில் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர் என்றும் அவர் தங்களது உலகத்தையும் பிரபலமாக்குவார் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

பிசினஸ் ஸ்டாண்டர்டு உள்பட பல பத்திரிகைகளில் பணியாற்றி, பிபிசி வானொலி நிலையத்திலும் பணியாற்றிய அனுபவமுள்ள சஞ்சய் புகாலியா அவர்கள் அதானி குழுமத்தின் ஊடகத்தையும் இந்தியாவின் நம்பர் ஒன் ஊடகமாக கொண்டுவர தீவிர முயற்சி செய்வார் என்று கூறப்படுகிறது.

அரசியல், சினிமா, பொது செய்திகள், வணிகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு செய்திகளை பொது மக்களுக்கு உடனுக்குடன் திட்டமிட்டுள்ள அதானி குழுமத்தின் அதிகாரபூர்வ ஊடக பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version