சினிமா செய்திகள்

அஜித், விஜய்க்கு ஏற்பட்ட தோல்வியும் சிவகார்த்திகேயனின் வெற்றியும்: கோலிவுட்டில் பரபரப்பு

Published

on

கோலிவுட்டின் மாஸ் நடிகர்களான அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி தோல்வியடைந்த நிலையில் சிவகார்த்திகேயன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது என்பதும், விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகியது என்பதும் இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு படங்களின் தோல்விக்கு மிகப்பெரிய காரணம் அதிக பட்ஜெட்டில் உருவாகி குறைவான வசூல் செய்தது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிய நிலையில் இந்த படத்தின் வெள்ளி சனி ஞாயிறு வசூலே படத்தின் பட்ஜெட்டை எடுத்துவிடும் என்று தெரிகிறது .

டாக்டர் படம் போலவே இந்த படமும் 100 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் நாளே இந்த படம் 13 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இன்றும் நாளையும் சுமார் 40 கோடி வசூல் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் விஜய் ஆகிய இரண்டு மாஸ் நடிகர்களின் படங்கள் வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு நஷ்டத்தையும் வழங்கியுள்ள நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் லாபத்தைக் கொடுத்துள்ளதை அடுத்து அஜித் விஜய்யை சிவகார்த்திகேயன் முந்திடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

 

Trending

Exit mobile version