சினிமா செய்திகள்

ஐஸ்வர்யாவுக்கு போட்டியாக தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ஒரு பாலிவுட் படத்தை இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்த நிலையில் தனுஷ் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது ஐஸ்வர்யாவுக்கு போட்டியாக தனுஷ் களமிறங்கியதாக கூறப்படுகிறது.

தனுஷ் இயக்கிய ‘பா பாண்டி’ என்ற திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியானது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவர் ஒரு சில படங்களை இயக்க முடிவு செய்தாலும் நடிப்பில் பிஸியாக இருந்ததால் படங்கள் இயக்கவில்லை.

இதனை அடுத்து தற்போது அவர் இயக்கும் இரண்டாவது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நாகார்ஜுனா மற்றும் அதிதி ராவ் ஹைதாரி முக்கிய வேடங்களில் நடிக்கும் படத்தை இயக்கி அதில் ஒரு கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது .

இந்த படம் 600 வருடங்களுக்கு முந்தைய சம்பவத்தின் அடிப்படையில் கற்பனை கலந்த ஒரு படம் என்றும் இந்த படத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் தரப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது .

இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சீன் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version