இந்தியா

ஏர்டெல், வோடோபோனை அடுத்து கட்டணத்தை உயர்த்தியது ஜியோ: அதிர்ச்சியில் பயனாளர்கள்!

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்தியது என்பதும் இதனால் அதன் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதையும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக வோடபோன் நிறுவனம் ஒன்று கட்டணத்தை உயர்த்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய இரண்டு தொலைதொடர்பு நிறுவனங்களும் கட்டணத்தை திடீரென உயர்த்திய நிலையில் தற்போது ஜியோ நிறுவனமும் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் அதன் பயனாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஏராளமான பயனாளர்கள் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கும்போது நிலையில் ஜியோ நிறுவனம் கட்டணத்தை உயர்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ நிறுவனம் ப்ரீபெய்ட் கட்டணத்தை டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அதாவது நாளை நாளை மறுநாள் முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ நிறுவனத்தில் குறைந்தபட்சமாக 75 ரூபாய் என்றிருந்த பிரிபெய்டு கட்டணம் தற்போது 99 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது என்பதும் அதேபோல் அதிகபட்சமாக 2399 என்று இருந்த பிரிபெய்டு கட்டணம் தற்போது 2879 என உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோ நிறுவனத்தின் உயர்த்தப்பட்ட கட்டணங்களின் முழு விவரங்கள் இதோ:

 

 

Trending

Exit mobile version