உலகம்

அதானியை அடுத்து சிக்குவது யார்? ஹிண்டன்பர்க் குறி வைக்கும் நிறுவனம்..!

Published

on

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை காரணமாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் குறைந்தது என்பதும் இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த அதானி தற்போது 20வது இடத்திற்கும் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அதானி குடும்பத்தின் பங்குகள் குறைந்ததன் காரணமாக கோடிக்கணக்கில் வருமானம் பார்த்தது என்றும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்த நிலையில் ஹிண்டன்பர்க் நிறுவனம் அடுத்தபடியாக மிக முக்கிய அறிக்கை வெளியிடப்படும் என்றும் மிக விரைவில் அப்டேட் வரும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து அதானி குழுமத்தை அடுத்து ஹிண்டன்பர்க் நிறுவனம் குறி வைத்துள்ள அடுத்த நிறுவனம் எது என்ற கேள்வி தற்போது தொழில் அதிபர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதானி நிறுவனம் போலவே இந்தியாவின் முன்னணி நிறுவனம் ஒன்று குறி வைக்கப்படுகிறதா அல்லது வேறு நாட்டின் நிறுவனம் சிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எந்த நிறுவன மாக இருந்தாலும் இந்த அறிக்கை வெளியானால் அந்த நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கண்டிப்பாக ஹிண்டன்பர்க் ஆய்வு செய்யும் நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்ட நிறுவனத்தை தான் குறி வைத்து தான் இருக்கும் என்றும் அந்த நிறுவனத்தின் பங்குகளை ஷார்ட் செய்து விட்டு தான் ஹிண்டன்பர்க் அந்த அறிக்கையை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அதானி குழும நிறுவனங்கால் பெரும் லாபத்தை சம்பாதித்த ஹிண்டன்பர்க் அடுத்ததாக எந்த நிறுவனத்தை குறி வைத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் ஹிண்டன்பர்க் தனது சொந்த நாட்டில் இரண்டு வங்கிகள் திவால் ஆனதை கண்டுகொள்ளவில்லை என்பதும் சொந்த நாட்டில் உள்ள ஒரு வங்கி திவால் ஆனதை கூட கண்டுபிடிக்க முடியாத ஹிண்டன்பர்க் நிறுவனம் அடுத்த நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களை குறிவைப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Trending

Exit mobile version