வணிகம்

ஆதார் வழக்கு குறித்த உச்ச நீதிமன்ற தீர்பை அடுத்து எங்கு எல்லாம் இணைக்க வேண்டும் மற்றும் தேவையில்லை!

Published

on

ஆதார் வழக்கினை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான குழு புதன் கிழமை சில சேவைகளுக்கு அதார் இணைப்புக் கட்டாயம் என்றும் பலவற்றுக்குத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது. எனவே எங்கு எல்லாம் ஆதார் இணைப்பு தேவை மற்றும் தேவையில்லை என்ற விவரங்களை இங்குப் பார்க்கலாம்.

எங்கு எல்லாம் ஆதார் எண் இணைப்புக் கட்டாயம்?

பான் கார்டு

பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது ஆதார் எண் கட்டாயம் ஆகும். ஏற்கனவே பான் கார்டு பெற்றுவிட்டு இன்னும் ஆதார் இணைப்பினை செய்யாதவர்கள் இதனைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்து இருப்பது கண்டறியப்பட்டு ஒரு கர்டு மட்டுமே செல்லுபடியாகும்.

மானியங்கள்

அரசு நல திட்டங்கள், எல்பிஜி போன்ற மானியங்களைத் தொடர்ந்து பெற வேண்டும் என்றாலும் ஆதார் எண் இணைப்புக் கட்டாயம் ஆகும்.

வருமான வரி

வருமான வரி செலுத்தும் போது அதார் எண்ணை இணைத்து இருந்தால் மட்டுமே இனி வருமான வரி தாக்கல் செய்ய முடியும் என்று உச்ச நீதிமனத்தின் தீர்ப்பு உறுதி செய்துள்ளது.

எங்கு எல்லாம் ஆதார் இணைப்பு தேவையில்லை?

வங்கி கணக்கு, மொபைல் எண் அல்லது சிம் கார்டு, தனியார் நிறுவனங்கள், பள்ளி சேர்க்கை, சிபிஎஸ்ஈ, யூஜிசி, நீட் உள்ளிட்டவற்றுக்கு ஆதார் எண் இணைப்பு தேவையில்லை.

seithichurul

Trending

Exit mobile version