உலகம்

ஆண்கள் 2 திருமணங்கள் செய்யாவிட்டால் சிறை: இளைஞர்கள் குஷி!

Published

on

இந்தியா உட்பட பல நாடுகளில் முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்தால் சிறை தண்டனை என்ற சட்டம் அமலில் இருக்கும் நிலையில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றில் ஆண்கள் இரண்டு திருமணம் செய்யாவிட்டால் சிறை தண்டனை என்ற புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியா என்ற நாட்டில் உள்ள ஆண்கள் கட்டாயம் இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு இரண்டு திருமணம் செய்து கொள்ளாத ஆண்கள் சிறையில் அடைக்கப் படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இரண்டாவது திருமணம் செய்வதற்கு முதல் மனைவி எதிர்த்தால் அவரும் சிறையில் அடைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. ஆண்கள் அனைவரும் இரண்டு திருமணம் செய்ய வேண்டும் என்று கூறப்படுவதற்கு முக்கிய காரணம் என்னவெனில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த போரில் பல ஆண்கள் உயிரிழந்ததாகவும் இதனை அடுத்து அந்நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவும் பெண்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாகவும் இருப்பதால் தான் இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

பெண்களின் பாதுகாப்பு கருதியும் ஆண்களின் எண்ணிக்கையை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கவும் தான் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அரசின் இந்த முடிவை பல இளைஞர்கள் வரவேற்று உள்ளனர் என்றாலும் இரண்டு திருமணம் செய்துகொண்டு குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்படுவதாகவும் சில ஆண்கள் தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version