உலகம்

ஓடும் விமானத்தில் ஏற முயலும் ஆப்கான் வாசிகள்.. அதிர வைக்கும் வீடியோ…

Published

on

ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். ஆப்கனின் தலைநகர் காபூல் உள்பட அனைத்து பகுதிகளும் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கான் நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டார். இன்னும் ஓரிரு நாட்களில் ஆப்கனில் தாலிபான்கள் அரசு அமைய உள்ளது.

தாலிபான்கள் ஆட்சி என்பது மிகவும் பழைமை வாய்ந்தது. பெண்கள் படிக்கக் கூடாது, வெளியே வந்தால் தனியாக வரக்கூடாது, தாலிபான் அரசுக்கு எதிராக செயல்பட்டால் நடுரோட்டில் மக்கள் முன்னிலையில் சுட்டுக்கொள்வது போன்ற பழமையான சிந்தனைகளை கொண்டது. எனவே, அந்நாட்டுக்கள் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஆப்கனில் இருந்து வெளியேறி வேறு நாடுகளுக்கு சென்றுவிட பலரும் விரும்புகின்றனர். இதற்காக காபூல் விமான நிலையத்தில் பலரும் ஒரே நேரத்தில் குவிந்தனர். பேருந்து, ரயில்கள் போல விமானத்தில் ஏறுவதற்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எனவே, பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதை அடுத்து விமான நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கிருந்து புறப்படும் அமெரிக்க ராணுவ விமானத்தின் பின்னாலும், பக்கவாட்டிலும் ஓடிவரும் ஆப்கான் வாசிகள் எப்படியாவது விமானத்தில் ஏற முயற்சி செய்யும் வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கண்டிப்பாக பக்கவாட்டில் ஏறி நிற்கும் பலர் கீழே விழுந்து இறந்திருப்பார்கள் என கருதப்படுகிறது. இந்த வீடியோவை பகிர்ந்து ஜனநாயகம் வீழ்த்தப்படால் இதுதான் நிலை பலரும் நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

https://twitter.com/Random_Uncle_UK/status/1427210221865377794

 

seithichurul

Trending

Exit mobile version