உலகம்

ஆப்கானிலிருந்து வெளியேற விமான நிலையத்தில் குவிந்த மக்கள் – அதிர்ச்சி வீடியோ…..

Published

on

ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு பகுதியையும் தாலிபான்கள் தற்போது பிடித்து விட்டனர். ஆப்கனின் தலைநகர் காபூல் உள்பட அனைத்து பகுதிகளும் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. மேலும் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கான் திடீரென நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டார். இன்னும் ஓரிரு நாட்களில் ஆப்கனில் தாலிபான்கள் அரசு அமைய உள்ளது.

தாலிபான்கள் ஆட்சி என்பது மிகவும் பழைமை வாய்ந்தது. பெண்கள் படிக்கக் கூடாது, வெளியே வந்தால் தனியாக வரக்கூடாது போன்ற பழமையான சிந்தனைகளை கொண்டது. எனவே, அந்நாட்டுக்கள் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

எனவே, ஆப்கனில் இருந்து வெளியேறி வேறு நாடுகளுக்கு சென்றுவிட பலரும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக காபூல் விமான நிலையத்தில் பலரும் ஒரே நேரத்தில் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து, ரயில்கள் போல விமானத்தில் ஏறுவதற்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காபூல் விமான நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதை அடுத்து விமான நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version