உலகம்

குழந்தைகளாவது தப்பிக்கட்டும்: அமெரிக்க வீரர்களிடம் குழந்தைகளை ஒப்படைக்கும் தாய்மார்கள்!

Published

on

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேற முடியாத பொதுமக்கள் தங்கள் குழந்தைகளாவது தப்பிக்கட்டும் என குழந்தைகளை அமெரிக்க வீரர்களிடம் கொடுத்து வரும் காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அந்நாட்டில் இருந்து வெளியேற ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொதுமக்கள் முயற்சித்து வருகின்றனர்.

ஆனால் காபூல் விமான நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் விமானநிலையத்தை தாலிபான்கள் கொண்டுவந்துள்ளனர். எனவே நாட்டை விட்டு வெளியேற முடியாமல் பல பொது பொது மக்கள் திண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்க இராணுவம் தற்போது படிப்படியாக வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்க ராணுவ வீரர்களிடம் ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை கொடுக்கும் காட்சியில் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

தங்கள் குழந்தைகளாவது அமெரிக்காவில் பாதுகாப்பாக இருக்கட்டும் என்று அவர்கள் தங்கள் குழந்தைகளை கொடுத்து வருகின்றனர். பின்னாளில் அமெரிக்கா சென்றால் அவர்கள் அந்த வீரர்களிடம் தங்கள் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் அவர்கள் கொடுத்து வருவதாக தெரிகிறது.

இது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் நிலைமையை உணர்ந்து கொள்ள இந்த ஒரு வீடியோ போதும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்க விமானப்படை விமானத்தில் உள்ள ஒரு குழந்தையை குளிரால் நடுங்குவதை பார்த்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் தன்னுடைய யூனிபார்மை கழட்டி அந்த குழந்தைக்கு போர்த்திவிட்டு காட்சியின் புகைப்படமும் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version