கிரிக்கெட்

ஐபிஎல் போட்டி ஒளிபரப்புக்கு தடை விதித்த நாடு: காரணம் இதுதான்!

Published

on

ஆறு மாத இடைவெளிக்கு பின்னர் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது என்பதும், கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற போட்டியில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ள நாடுகள் முழுவதிலும் இந்த போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன என்பதும், ரசிகர்கள் இந்த போட்டியை மிகுந்த ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டில் ஐபிஎல் போட்டி ஒளிபரப்புவதற்கு அந்நாட்டின் தாலிபான்கள் தடை விதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியின் வர்ணனைகளில் இஸ்லாம் எதிர்ப்புக் கொள்கைகள் இருக்க வாய்ப்பு இருப்பதால் ஐபிஎல் ஒளிபரப்புக்கு தடை விதிப்பதாக தாலிபான்கள் கூறியுள்ளனர். ஆப்கன் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் இதனை உறுதி செய்துள்ளார்.

எனவே ஆப்கனில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை கண்டு ரசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட் உள்பட எந்த விளையாட்டையும் விளையாட கூடாது என தலிபான்கள் தடை விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதைக்கு ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கு தடை விதிக்கவில்லை என்றாலும் எதிர்காலத்தில் ஆப்கானிஸ்தான் அணியை ஐசிசி தடைசெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version